2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இடமாற்றம் பெற்ற கிழக்கு ஆசிரியர்களை முன்னைய பாடசாலைகளுக்கு உடன் கடமைக்கு திரும்புமாறு உத்தரவு

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் பொருட்டு வழங்கப்பட்ட இடமாற்ற கடிதங்களுக்கமைவாக புதிய பாடசாலைகளுக்குச் சென்று கடமைகளை  பொறுப்பேற்றுக் கொண்ட அனைத்து ஆசிரியர்களும் அவர்கள் முன்னர் கடமையாற்றிய பாடசாலைகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவின் படி வலயங்களுக்குள்ளும் வலயங்களுக்கு வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் உடனடியாக ரத்துச் செய்யப்படுவதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம் தெரிவித்தார்.

தத்தமது கல்வி வலயங்களுக்குள் இடமாற்றங்களை பெற்றுக் கொண்ட ஆசிரியர்களில் 57 வீதமானோர் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளுக்கமைவாக புதிய பாடசாலைகளுக்குச் சென்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இடமாற்றத்துக்கு முன்னர் கடமையாற்றிய தமது பாடசாலைகளுக்கு உடனடியாகத் திரும்ப வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்ட இந்த இடமாற்றங்களிலுள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகள் திருத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டதொரு முறையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் புதியதொரு இடமாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் கல்விப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Wednesday, 22 June 2011 03:08 AM

    அப்போ வருசக் கணக்காக தங்கட பரம்பர சொத்துமாதிரி கட்டிப்பிடிச்சிக்கொண்டிருந்த பாடசாலய விட்டுப்போகாம இன்னும் கொஞ்சக்காலம் தங்கட சொந்த வேலையல கவனிக்க சான்ஸ் ஒண்டு கிடச்சிரிக்கி .டிசம்பரிலும் இவங்க போராட்டத்தை ஆரம்பிப்பாங்களோ பதினஞ்சு இருவது வருசமா பள்ளிகூடத்தில நாட்டி பராமரிச்ச மரங்கள விட்டிட்டு அப்படி லேசில போகலாமா என்ன?

    Reply : 0       0

    Ahamed Junaid Wednesday, 22 June 2011 01:07 PM

    எங்கள் இனிய மேலதிக ஆசிரியர்களே பாடசாலை நாட்களில் வயலுக்கு சென்று கடமைக்கு வருவது, சந்தைக்குபோவது வியாபார நோக்காக வங்கிக்கு செல்வது இவைகளை இனியாவது தவிர்த்து விடுங்கள் இல்லையேல் மாணவர்கள் போராட்டத்தில்இறங்கி விடுவார்கள் ஜாக்கிரதை .வழிகாட்டியவர்கள் நீங்களே --------

    Reply : 0       0

    நளீம் Wednesday, 22 June 2011 04:13 PM

    இப்னு அவு சரியாகச் சொன்னீங்க. வாழ்த்துக்கள். சோம்பேறிகளுடன் நல்லவங்களும் இடமாற்றம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டால் சிறந்தது என கருதுகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .