2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றங்களை ரத்துச் செய்வது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவேன்: ஹரீஸ் எம்.பி

Super User   / 2011 ஜூன் 16 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம். றம்ஸான்)

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அநீதியான ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பல்வேறு பிழைகளும், அநீதிகளும் காணப்படுகின்றன. அதேவேளை, சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் கல்முனை வலய ஆசிரியர்கள் மட்டும் இடமாற்றம் பெற்றுச் செல்வதை ஏற்க முடியாது. இந்த இடமாற்றங்களை ரத்துச் செய்வது குறித்து ஜனாதிபதியுடன் நான் பேசுவேன் என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசியர் இடமாற்றம் தொடர்பிலான கூட்டமொன்று இன்று காலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உiராயற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தொடர்ந்து பேசுகையில்ளூ

இந்த ஆசிரிய இடமாற்றமானது கிழக்கு மாகாண சபையின் ஆதரவுடனேயே இடம்பெறுகிறது. கிழக்கு முதலமைச்சர் இந்த இடமாற்றத்தை ஆதரிக்கின்றார். தவிரவும், இந்த ஆசிரிய இடமாற்றத்துக்கு எதிராக இதுவரை கிழக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை கொண்டுவரப்படவில்லை.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை நாம் கடந்த காலங்களில் எமது வரையறைக்குட்பட்டு செய்துள்ளோம். இனியும் செய்வோம்.

இவ்விவகாரம் தொடர்பில் சாதகமானதொரு தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும். ஜனாதிபதியுடன் பேசி இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்வேன் என்றார்.

இக் கூட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களால் தாம் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் இங்கு விபரித்தனர்.

இதேவேளை, இன்று கல்முனை கல்வி வயலகத்திலுள்ள அதிமான பாடசாலைகள் இயங்கவில்லை. சில பாடசாலைகளின் மாணவர்கள் ஆசிரியர்களின் இடமாற்றங்களை ரத்துச் செய்யுமாறு கோரி – பாதாதைகளுடன் கல்முனை வலயக் கல்விப் பணிமனை வரை ஊர்வலமாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0

  • ameer Friday, 17 June 2011 12:20 AM

    எல்லாம் முடிந்த பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு .....
    இனி ஜனாதிபதி உடன் பேசி ஒன்றும் நடக்காது .. ஜனாதிபதி ரஷியாவில் இருக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரியாது ...
    ஒருவேளை கனவில் பேசுவீர்கள் போல .. எதற்கு இந்த புருடா?

    Reply : 0       0

    ul hilal Friday, 17 June 2011 04:24 AM

    ippadiyallava mp irukkavandum

    Reply : 0       0

    Nanpan Friday, 17 June 2011 09:41 PM

    ஆசிரியர் சமச்சீரின்மை நீக்கப்பட வேண்டியது தானே ? நகர்ப்புறங்களில் மட்டும் ஆசிர்யர்கள் குவிந்து கிடப்பது தவிர்க்கப்பட்டு கிராமங்களுக்கும் சிறந்த மாணவர்களை உருவாக்க முன் நெடுக்கும் நல்லதொரு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குங்களேன் ! அரசியலாக்காதீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .