2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: அமைச்சர் ஹக்கீம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

'அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்' என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'அநுராதபுரத்தில் ஸியாரமொன்று உடைக்கப்பட்டது. காவியுடை தரித்தவர்கள் சிலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காக்கியுடை தரித்தவர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியானதொரு லட்சணத்தில் இந்த அரசாங்கத்தில் நான் ஓர் அமைச்சராக இருக்கின்றேன். இதைப் பார்த்துக் கொண்டு என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது. மு.காங்கிரசின் தலைவருக்கு இவற்றினைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும்.

அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவருடன் இன்று காலை கடுமையான வாக்குவாதமொன்றில் ஈடுபட்டேன். அப்போது அவரிடம் நான் கூறினேன்.

இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டமைக்கும், அநுராதபுரத்தில் ஸியாரம் உடைக்கப்பட்டமைக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசங்களையும் நான் காணவில்லை. பாபர் மஸ்ஜித்தினை உடைத்த காவியுடை தரித்த இந்துத் தீவிரவாதிகளும், இங்குள்ள காவியுடை தரித்தவர்களுக்கும் இடையில் எங்களால் வேறுபாடு காண முடியவில்லை.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டோர் அங்கு நீதிமன்றம் சென்றனர். ஓரளவு நியாயமும் வழங்கப்பட்டது. அதேபோன்று, அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.

ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று அந்த உயர் மட்டத்தவரிடம் நான் கூறிய நிலையில்தான் - அரசாங்கத்தின் செலவில் அந்த ஸியாரத்தினை மீண்டும் கட்டித்தருவதாக அறிவித்தல் வந்திருக்கின்றது.

இதுபோல இன்னுமொரு விடயமும் உள்ளது. அரசாங்கத்திலுள்ள அந்த நபர் எனக்கும் கூட்டாளிதான். ஆனால், சிலவேளைகளில் காட்டு தர்பார் நடத்துவார். ஒரு தடவை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டினார். பிறகு – தான் அவரைக் கட்டவில்லை என்றும் குறித்த உத்தியோகத்தர் தன்னைத் தானே கயிற்றால் கட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னரும் அந்த நபர் ஓர் அறிக்கை விடுகிறார். அதாவது, மாடுகளை அறுப்பவர்களைக் கண்டால் அவர்களின் கைகளை வெட்டுவேன் என்கிறார். இந்தக் காட்டுத் தர்பார் மிகவும் மோசமானதாகும். இதைக் கேட்டுக் கொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது. இவ்வாறான கூற்றுகளும் செயற்பாடுகளும் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும். இந்த நிலையில், இவ்விடயங்களை நாமும் மிகப் பக்குவமாக அணுக வேண்டியுமுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஹஜ் பெருநாள் வருகின்றது. அப்போது மாடுகளை அறுத்து உழ்ஹியா எனும் மார்க்கக் கடமையினை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். அதேவேளை, முஸ்லிம்களாகிய நாமும் சற்று பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள பிரச்சினையை மேலும் ஊதி வளர்த்து விடும் வகையில் நடந்து கொள்ளாமல் உழ்ஹியாவை மேற்கொள்ளும் போது – சாதுரியமாகச் செயற்பட வேண்டும்.

எது எவ்வாறினும், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்கிற காட்டுத் தர்பார்களையெல்லாம் அனுமதிக்க முடியாது. மு.கா. தலைமைத்துவம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் மாட்டாது.

நமது சமூகத்துக்கு அபிவிருத்தி தேவைதான். ஆனால், முதுகெலும்புடன்தான் அதை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைவிடுத்து, அரசின் முன்னால் நாலாக – எட்டாக மடிந்து வளைந்து கொண்டு, தருவதைத் தாருங்கள் நாம் எதுவும் பேச மாட்டோம் எனக் கூறி, ஒரு மூலையில் மடங்கிக் கிடக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் முடியாது".


You May Also Like

  Comments - 0

  • Mohamed Marzook Wednesday, 21 September 2011 06:25 PM

    He has never done what he said. Let us see what he is going to now.

    Reply : 0       0

    faslan Wednesday, 21 September 2011 05:49 AM

    நிச்சயமா நடக்குமா தலைவருக்கு தல வலிக்குது

    Reply : 0       0

    Akkaraipattu. Wednesday, 21 September 2011 07:23 AM

    திருவாளர் ஹகீம் - நீங்க கேஸ் பைல் பண்றிங்க...?? அரசாங்கத்துக்கு எதிரா...??? இது நடக்கிற காரியமா.....?? ம்ம்ம்... பாவம் இத கேட்டு கைதட்டின மக்கள்...

    Reply : 0       0

    nafees Wednesday, 21 September 2011 08:05 AM

    இந்த உரை மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதின் வெளிப்பாடாக இருப்பின் அது வரவேற்கப்பட வேண்டியதே, அல்லாத பட்சத்தில் இது ஒரு தேர்தல் பூச்சாண்டியாக இருக்குமாயின்...


    Reply : 0       0

    sahabdeen Wednesday, 21 September 2011 08:52 AM

    சாரி சார் எந்த நீதி மன்றம் ????

    Reply : 0       0

    islam Wednesday, 21 September 2011 03:49 PM

    தேர்தலுக்கு ரெடி போல,

    Reply : 0       0

    J. Nihath Wednesday, 21 September 2011 04:26 PM

    அரசியலுக்காக என்ன வேண்டும் என்றாலும் சொல்விங்க...

    Reply : 0       0

    Riyal A.M Wednesday, 21 September 2011 04:26 PM

    யாரை ஏமாற்றுவதற்கு இந்த வெட்டிப் பேச்சு .... ஒக்டோபர் 8 க்கு பிறகும் இதே கருத்த சொன்னா கொஞ்சம் நம்பலாம் ...

    Reply : 0       0

    Riyal A.M Wednesday, 21 September 2011 04:41 PM

    விடுங்க ஐயா ..! ! ! நம்ம தலைவர் ஒக்டோபர் 8 க்கு பிறகு காணாமல் போய் விடுவார்....... இந்த பேச்செல்லாம் ஒக்டோபர் 8 வரை மட்டும்தான்....... பேசுவார் நம்ம தலைவர் ...ஹா ..ஹா

    Reply : 0       0

    uoorann Wednesday, 21 September 2011 04:50 PM

    தம்பி ரோசன் ஏன் மருதமுனை என்று பிரித்து யோசிக்கின்றீர்கள்? சபைக்கு ரக்கீப் சாரும் வரட்டும் நிசாம் சாரும் வரட்டும். கல்முனை மாநகரம் நமது தலை நகரம்.
    நிசாம் சார் போல ஆட்கள் சபைக்கு தலைவரா இருந்த நமக்கு பெருமை இல்லையா? மரத்துக்கும் இருபாத்தி ஒன்றுக்கும் போட்டு பாப்போமே. நமக்குள்ள பிரிப்பு வேண்டாம். சாய்ந்தமருது ஆட்களும் மேயர் வரணுமாம். அப்படி பார்த்தல் அவங்கட ஊருக்கு என்ன செய்றது இந்த முறை நிசாமுக்கு கொடுத்து பின்னர் மத்தவர்கள யோசிப்பம். முஸ்லிம் காங்கிரசுக்கு எதிர்கால தலைவர்களும் வேண்டும் தானே ??????????

    Reply : 0       0

    asfaq Wednesday, 21 September 2011 05:03 PM

    எந்த அரசியல்வாதியையும் நம்பி பிரயோசனம் இல்ல இனி இளைஞர்களாகிய நாங்கதான் முடிவு எடுக்கனும்.

    Reply : 0       0

    asfaq Wednesday, 21 September 2011 05:05 PM

    எந்த அரசியல் வாதியையும் நம்பி பிரயோசனம் இல்ல இனி இளைஞர்களாகிய நாங்கதான் முடிவு எடுக்கனும்

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 21 September 2011 05:20 AM

    முதுகெலும்பு இல்லாத அரசியல் வாதிகள்தான் ஊளையிட்டுக்கொண்டு இருப்பது. இங்கு உறுதியாகவும் உசாராகவும் பேசி இருக்கிறார். முஸ்லீம்களின் ஏகமான ஒரே தலைவன் ரவூப் ஹக்கீம். இவருக்கு நிகர் இவர்தான் மற்றவர்கள் தண்ணீர் வைக்கனும் இவருக்கு.......... நன்றி.

    Reply : 0       0

    hafeel Wednesday, 21 September 2011 07:53 PM

    முஸ்லிம் ஆகிய நாங்கள் சியாரம் ,தர்ஹா இவைகளை உடைக்க வேண்டும் நாங்கள் செய்ய வில்லை. அவர்கள் செய்தார்கள் That's right.

    Reply : 0       0

    Ossan Salam - Doha Wednesday, 21 September 2011 10:29 PM

    ஒரு உண்மை முஸ்லிம் இந்த விடயத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிய மாட்டான். காரணம் ஜியாரங்கள் உடைக்கப்பட வேண்டும். வல்ல அல்லாஹ்வைத் தொழுபவன் இந்த நல்ல விடயத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.... அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இது அவல் கிடைத்த மாதிரி தான்....நாங்கள் செய்ய வேண்டியதை அன்னியர்கள் செய்திருப்பதை கண்டு மகிழ்ச்சி கொள்வோம்.

    Reply : 0       0

    lafeer Thursday, 22 September 2011 01:57 AM

    அமைச்சர் ரவூஃப் ஹக்கீமுடைய பேச்செல்லாம் பலமாகதான் உள்ளது நடைமுறையில் செய்வாரா என்பதுதான் கேல்விக் குறி.

    Reply : 0       0

    siraj Thursday, 22 September 2011 04:09 AM

    சியாறம் என்ற சொல் பாவிக்கப்படுகிறது ஆனால் அது பள்ளிதான்.
    அது தண்டிக்கவும் கண்டிக்கவும் வேண்டிய விடயம். அது இருக்க ரவூப் ஹக்கீம் இவ்வளவு தைரியமாகப் பேசும் போது விளங்கனும் முஸ்லீம் களுக்குத் தேவையான ஒரே தலைவன் இவர்தான் என்று. ஆனால் இன்று நாலா மடிஞ்சி கிடந்து காலைப்பிடித்து இன்னும் என்னமோ எல்லாம் பிடித்து .... திரியும் மற்ற அரசியல் வாதிகளுக்கு இவரின் கூற்று ஒரு எடுத்துக்காட்டு.

    Reply : 0       0

    Brooms Thursday, 22 September 2011 04:36 AM

    தலைவா நீங்க மட்டும் பாசே புக் வந்தால் நிறைய கமெண்ட்ஸ் கிடைக்கும்.

    Reply : 0       0

    Riyal A.M Thursday, 22 September 2011 06:11 PM

    தலைவருக்கு வக்காலத்து வாங்குவோருக்காக .... அரசுடன் இணைந்த முஸ்லிம் காங்கிரஸ் .... என்ன செய்திருக்கிறார்கள் முஸ்லிம்களுக்காக ? ? ? ?

    Reply : 0       0

    riyazy Friday, 23 September 2011 10:03 PM

    என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பதை கவனமாக சிந்திப்பது நம் எல்லோரினதும் கடமை,

    Reply : 0       0

    Shaheem Sunday, 25 September 2011 07:42 AM

    சியாரத்தை உடைப்பது ஒரு முஸ்லிமின் கடமை அல்லவா. பள்ளிவாயிலில் மட்டுமல்ல, அதனை சுமந்த உள்ளங்களில் கூட அவை உடைக்கப்பட வேண்டுமே, இப்போ எதற்காக வீண் வம்பு?
    ஓ.. தாங்கள் ஓர் அரசியல்வாதி என்பதை மறந்து விட்டேன்..!

    Reply : 0       0

    xlntgson Sunday, 25 September 2011 09:29 PM

    Shaheem கோழைத்தனமான முடிவு! சியாரங்களை உடைப்பது என்றால் உலகில் சிலைகளை எல்லாம் முதலில் உடைக்க வேண்டும் அதன் பின் இசைக் கருவிகளை எல்லாம் உடைக்க வேண்டும். அதன் பின் தான் சியாரங்களுக்கு வர முடியும். உலகில் சிலை வணங்குவோர் அறவே இல்லாமல் போக மாட்டார்கள். அவர்களோடு சமாதானமாக வாழ இயலாது என்றால் இந்தியாவில் வாழும் பதினெட்டுக் கோடி முஸ்லிம்களையும் அரபு நாடுகள் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ள இயலும் என்றால் சிலைகளை உடைக்கலாம். இசைக்கருவிகளை உடைக்கலாம்! ஹிந்துக்குஷ் கொள்கை இமயத்தோடு நின்று விடுகிறது. அதற்கப்பால் அல்ல.

    Reply : 0       0

    prgfox Sunday, 25 September 2011 10:11 PM

    செய்யுங்க..ஆனா... election பெயரில் செய்யாதீங்க .... நல்ல முயற்சி.. இது போல..நில அபகரிப்பு, மனித உரிமை மீறல் எல்லாம் இருக்கு. பாத்து செய்யிங்கோ ...

    Reply : 0       0

    kulathooranmarza@yahoo.com Wednesday, 21 September 2011 12:44 AM

    சமூகத்தின் அபிவிருத்தியை முதுகெலும்புடன், மேற்கொள்வதை விடுத்து அரசின் முன்னால் நாலாக, எட்டாக, மடியமுடியாது என்று சொல்வது? அருகில் இருக்கும் நீல சேர்ட் போட்டிருப்பவருக்கு கூறும் ஹிண்டோ(hint)? எம்.பி. இரு தினங்களுக்கு முன் கூட்டமொன்றில் மகி ராசாவை புகழ்ந்து பேசினார். அதன் பிரதிபலிப்பு மு.கா.தலைவரின் வாய் மொழிவோ?

    Reply : 0       0

    Sara Tuesday, 20 September 2011 11:46 PM

    என்னாச்சு நம்மாளுகளுக்கு....

    ஓ எலக்ச்சன் வருகுது தானே ... :-)
    அது தான் இந்த பில்டப்பா?

    Reply : 0       0

    meenavan Tuesday, 20 September 2011 11:55 PM

    நீதிமன்றம் செல்வதை விட நீதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் என்ன?

    Reply : 0       0

    rozan Wednesday, 21 September 2011 12:07 AM

    உலக மகா நடிகர் .... அடுத்த ஒஸ்கார் காத்திருக்கு...... இவருக்கு லேட்டஸ்ட் நியூஸ் தெரியாதாக்கும்....அரசாங்கம் சியாரத்தினை கட்டிதரமாட்டாது என்ற செய்தி.......

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 21 September 2011 12:09 AM

    ஆமா நீதிமன்று போவதன் முதல் இதனை முழு சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதே உங்கள் முதல் கடமையாகும்!!! தனி முஸ்லிம் கட்சியின் தலைவரே உங்கள் கட்சிக்கி மக்கள் வாக்களித்தது தமது குரலை உங்களூடாக முழு உலகிற்கும் தெறிய படுத்த. எனவே முதலில் எங்கள் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துங்கள். வேதனை எண்ண வெனில் கடந்த முப்பதுவருட எமது சோகங்களும் பாதிப்புகளும்இ எமக்கு நேர்ந்த அநியாயங்களும் ஆவன ரீதியாக ஆதாரபூர்வங்களுடன் அடுத்தே உள்ள எங்கள் மொழி பேசும் தமிழ் நாட்டு முஸ்லிம் சகோதரகளையே எட்டாத போது நாம் எங்கே எமது பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்தி ஆதரவு தேடுவதில் பின் நிற்கிறோம் என்பதை சற்று அளந்து பார்ப்பீர்கள் எனில் உங்களுக்கு அதன் தொலை
    தூரம் புரியும்.

    Reply : 0       0

    slmuslim Wednesday, 21 September 2011 12:16 AM

    பேசி அறிக்கை விடாமல் செயலில் காட்டட்டும். இதுவும் ஒரு தேர்தல் வாக்குறுதியாக இருக்காமல் சமூகத்துக்கான உரிமை குரலாக இருக்கட்டும். தங்களை வாப்பாஇ அவுலியா கூட்டத்தினர் என்று பறைசாற்றும் அமைச்சர்கள் மௌனியாக இருப்பது ஏன்?

    Reply : 0       0

    shafi Wednesday, 21 September 2011 12:24 AM

    superb meenavan! அரசாங்கம் கவிழும்போல இப்பவே bitta போட்டால்தான் பொழைச்சுக்கிடலாம்.

    Reply : 0       0

    rozan Wednesday, 21 September 2011 12:34 AM

    நிசாம் மருதமுனை வாக்கினை பெறவே மாட்டார்......ரகீப் தான் அடுத்த மேயர்..........

    Reply : 0       0

    Amjath ULM Wednesday, 21 September 2011 12:39 AM

    நண்பர் மீனவன் மக்கு என்பதை இப்படி இன்டர் நெட்டிலா தன்னை தானே தெரியப்படுத்திக்கொள்வது ......
    சபாஷ் உங்கள் திறமையான கருத்துக்கு....

    Reply : 0       0

    fazil Wednesday, 21 September 2011 12:42 AM

    அல்லாஹு அக்பர் ...................தொடரட்டும்

    Reply : 0       0

    M.M.Atheek Wednesday, 21 September 2011 12:42 AM

    என்ன தலைவர் உண்மையில் சொல்றீங்களா? இல்லாட்டி இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் மட்டும் உள்ள பில்டப்பா...

    Reply : 0       0

    Wijay Tuesday, 20 September 2011 11:38 PM

    சபாஷ் தலைவா ....

    Reply : 0       0

    nifras Wednesday, 21 September 2011 12:45 AM

    போதுமட தலைவா இப்பயவடு ஒரு வார்த்த பேசி இருக்கீங்க .இதை செயலிலும் காடுங்க !!!

    Reply : 0       0

    Janan Wednesday, 21 September 2011 01:06 AM

    ஐயோ ......... நம்ம அமைச்சருக்கு இப்பதான் செய்தி கிடச்சிதோ...... .......... இதை பாராளுமன்றத்தில் பேசுங்களேன் பாக்கலாம்.

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 21 September 2011 02:20 AM

    நிதானமாக கருத்து சொல்லுங்கள் . தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அமைச்சர் ஹகீமுடைய ஆவேசமான அறிக்கை பாராட்டப்பட வேண்டியவை . அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசியது துணிச்சல். அளவிமௌலானாவும் ஹக்கீமும் தானே சியாரம் உடைப்பு விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ளனர். மற்ற அமைச்சர்களும் ,எம்பி மாறும் இன்னும் தூக்கம். சியாரதுக்கும் அவ்ளியாக்களுக்கும் எதிரானவர்கள் இப்போ ஹக்கீமுக்கு எதிராகவும் கச்சை கட்டி நிற்பார்களே. பாவம் .

    Reply : 0       0

    sajeer Wednesday, 21 September 2011 03:33 AM

    நாங்கள் நம்ப தயாரில்லை.

    Reply : 0       0

    rif Wednesday, 21 September 2011 04:15 AM

    அரசு கட்டமட்டாது.

    Reply : 0       0

    Rizard Wednesday, 21 September 2011 04:19 AM

    தூங்கியது போதும் பொங்கியெழு ! தலைவா ! இந்த பொறாமை பிடித்த முனாபிக்குகளுக்கு அசடு வழியட்டும். நீ சொன்னதை செயலில் காட்டு தலைவா! நீல சட்டை போட்டிருக்கும் உறுப்பினரிடம் ஒரு கண் வை! சட்டையை பார்த்தோமில்ல, எவ்வளவு கலராக இருக்கு. பெல்டி அடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

    Reply : 0       0

    Hari Wednesday, 21 September 2011 04:23 AM

    சபாஸ் அபூ, ஹகீம் நேற்றுதான் அரசுடன் இணைந்தவர். எப்போதோ இருந்து இருந்த அமைச்சர்கள் எங்கே? பௌசி, ரிஷாத், அதாஉல்லா பலசாலிகளாச்சே. எங்கே சத்தமே இல்லையே? மறுபக்கம், ஹகீம் இதை பாராளுமன்றத்தில் பேசவேண்டும். சியாரம், மாடு அறுப்பது பற்றி பாராளுமன்றில் பேசினால் தான் இவர்களுக்கு ரோசம் வரும். சியாரம் பற்றி அந்த நிர்வாகிகள் முறைப்பாடு செய்து இருக்கிறார்களா? முறைப்பாடு எழுதப்பட்டதா? இலக்கம் என்ன? போட்டோகள் இருக்கிறதா? ஆவணப்படுத்துங்கள். ஹீக்கீமிடம் கொடுங்கள். பாப்போம்.

    Reply : 0       0

    meenavn Wednesday, 21 September 2011 04:24 AM

    அம்ஜெத் உங்கள் கருத்துக்கு கிடைக்கும் புள்ளிகளே, நீங்கள் புத்திசாலியா? அறிவிலியா(மக்கு)? என்பதை தீர்மானிக்கும். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை கருத்து வழங்குபவர்கள் தீர்மானிக்கட்டும்.உங்களுக்கும் புரியிதுதானே?

    Reply : 0       0

    lankan Wednesday, 21 September 2011 04:24 AM

    எப்போ ஜிஹரத் உடைதாங்க ? பத்து நாள் ஆச்சி. இப்போதான் உங்களுக்கு வோட் கிடைக்காது போல தெரியுது இல்லியா அதுதான் இஸ்லாமியர்கள் கூட இறக்கம் வந்திருச்சோ? எத்தனை நாள் தான் ஏமாறுவோம் ?????

    Reply : 0       0

    musthafa Wednesday, 21 September 2011 04:30 AM

    இதேபோலே எவ்வளவு பைலா பார்த்திட்டோம் தலைவா.
    எதுவும் பலிக்காது. அக்கறை இருந்தா உடனடியாக
    பதவி விலகி காட்டலாமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X