2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுப்பூசித் திட்டம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாளரான கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

 ஐ எம் எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாளரான கீதா கோபிநாத் இன்று  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2021ஆம் ஆண்டு  இந்தியா 9.5% வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டுள்ளது. கடந்த ஜூலையில் இந்தியப் பொருளாதாரம் கொரோனா இரண்டாவது அலையால் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன் பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா காட்டிவரும் திறனால் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி காணும்.

இப்போதைக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐஎம்எஃப் ஏற்கெனவே வெளியிட்ட கணிப்பில் மாற்றம் செய்யத் தேவையில்லை. எங்கள் கணிப்பின் படி 2020இல் 7.3% ஆகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி 202இல் 9.5% என்றளவில் இருக்கும், 2022 இல் 8.5% என்றிருக்கும்.

சர்வதேசப் பொருளாதாரம் 2021 இல் 5.9% என்றும், 2022ல் 8.5% என்றும் இருக்கும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6% ஆகவும், அடுத்த நிதியாண்டில் 5.2% ஆகவும் இருக்கும்.சீனாவில் இந்த ஆண்டு 8% வளர்ச்சியும், 2022 இல் 5.6% வளர்ச்சியும் இருக்கும் என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .