2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Honeytrapஇல் சிக்கி பெண்ணிடம் கசியவிட்டவர் கைது

Editorial   / 2022 ஜூன் 22 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அங்கமான டிஆர்டிஎல் (DRDL - Defense Research & Development Laboratory) அமைப்பில் பணியாற்றும் பொறியாளர் ஒருவர்,  Honeytrapஎனப்படும் பாலியல் வலையில் சிக்கி இந்திய ஏவுகணை திட்டத்தின் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கசியவிட்ட அதிர்ச்சிக்குரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவரை உளவுத்துறை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளி பேஸ்புக் மூலமாக பழகி தன் வலையில் பொறியியலாளரை வீழ்த்தியுள்ளார். போலியான பெயரில் பழகிய அந்த​ப் பெண், பிரிட்டனில் பாதுகாப்பு சார்ந்த நாளிதழில் பணியாற்றுவதாக  ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.  திருமணம் செய்து கொண்டு காலம் முழுவதும் வாழப் போவதாகவும் அப்பெண் உறுதி அளித்துள்ளார்.

பொறியியலாளர், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி பகுதியில் வேலை செய்துவருகின்றார். அணு ஆயுத திறன் கொண்ட கடற்படையில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் விவரங்களை அப்பெண்ணிடம் கசியவிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் வரை பொறியியலாளர், பாகிஸ்தான் உளவாளி பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

 

இந்த பெண்ணுடன்  வீடியோ கோல் மூலம் பேச பொறியியலாளர் முயற்சி செய்தும் அவர் அதை ஏற்கவில்லை. மேலும், அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பொறியியலாளர் கேட்டதற்கும் உளவாளி பெண் மறுப்பே தெரிவித்துள்ளார்.

கைதான பொறியியலாளரிடம் இருந்து இரண்டு அலைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் சில ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றும் பொறியியலாளரின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனையை பொலிஸார் ஆராய்ந்துவருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .