2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (12.10.2011)

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (12.10.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 25ஆம் நாள் (12.10.2011) புதன்கிழமை. மரண யோகமும் பௌர்ணமி திதியும் ரேவதி நட்சத்திரம் மாலை 7.58 மணிவரை, பின்பு அசுபதி.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 01.30 மணி வரை
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 5.45 மணிவரை



மேடம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், பெண்களின் உதவிகள் கிடைக்கும், மேல் அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்வினி: இன்பம்
பரணி: ஆகாரம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நிதானம்


இடபம்
தொழிலில் நவீன நுட்பங்களினால் முன்னேற்றம், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: நட்பு
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2: வாய்ப்பு
 

மிதுனம்
பெரியோர்களின் அறிவுரைகள் நற்பண்புகளை ஏற்படுத்தும், அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், பணவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: ஆலோசனை
புனர்பூசம்: லாபம்


கடகம்
நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும், அரச தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தல், நட்பு வட்டம் விரிவடைதல்.
புனர்பூசம்: ஒற்றுமை
பூசம:; மனஅமைதி
ஆயில்யம்: அனுகூலம்


சிம்மம்
திறமையான சாதனைகளினால் வெற்றி அடையலாம், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சியை தரும், நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகம்: நற்செய்தி
பூரம்: குடும்ப மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


கன்னி 
இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம். 
உத்திரம் 2, 3, 4: ஆசீர்வாதம்
அஸ்தம்: மனஅமைதி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆற்றல்


துலாம்
பணவரவு ஏற்படும், சில உடல் உபாதைகள் வந்து நீங்கும், பகைவர்களுடன் வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நாவடக்கம்
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: தேகசுகம்


விருட்சிகம்
உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், புதிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும், குடும்ப உறவினர்களின் வருகை.
விசாகம் 4: புதிய வழி
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: புத்துணர்ச்சி


தனுசு
மனதுக்கு நிறைவான உணவுகள் கிடைக்கும், எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும், நீண்ட நாள் நட்புக்கள் பலம்பெறும்.
மூலம்: ஒற்றுமை
பூராடம்: நற்செய்தி
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆகாரம்


மகரம்
தொலைதூர பயணங்கள் செல்லவதனால் நன்மை, பெண்களின் உதவிகள் கிடைக்கும், மனசோர்வுகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: சலுகை
அவிட்டம் 1, 2: களைப்பு


கும்பம்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், நவீன வேலை திட்டங்களை செயல்படுத்தல், மனபயங்கள் தோன்றி மறையும்.
அவிட்டம் 3, 4: ஆதாயம்
சதயம் : விடா முயற்சி
பூரட்டாதி 1, 2, 3: கலக்கம்


மீனம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், இனிமையான தூக்கம் கிடைக்கும், ஆலய அனுஷ்டானங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: வழிபாடுகள்
உத்திரட்டாதி: நிம்மதி
ரேவதி: சுபம்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .