2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியா - பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் கடும் புயல்;100 பொதுமக்கள் உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீசிய கடும் புயல் காரணமாக 100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தக் கடும் புயல் காரணமாக பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளான மேற்கு வங்காளம், பீகார் மற்றும் பங்களாதேஷிலுள்ள ரங்பூர் ஆகிய பகுதிகளியிலேயே இந்த கடும் புயல்க் காற்று வீசியுள்ளது. 

இந்தக் கடும் புயல் காற்று காரணமாக 50,000 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் மின்சார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த வருடம் மே மே மாதம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின்  எல்லைப் பகுதியில் வீசிய கடும் புயல் காரணமாக 150 பொதுமக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .