2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிலிப்பைன்ஸின் மறாவியில் முன்னேறுகிறது இராணுவம்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிலிப்பைன்ஸின் தெற்கு நகரான மறாவியில், இராணுவம் முன்னேறுவதாக, நேர்காணலொன்றில், பிலிப்பைன்ஸ் இராணுவத் தளபதி ஜெனரல் எடுவார்டோ அனோ, இன்று (30) தெரிவித்தார்.

வீடு வீடாகச் சென்று தேடுதல் நடாத்தும் இராணுவம், இன்று காலை வரையில், 70 சதவீதமான மறாவியை, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், எஞ்சியுல்ள ஆயுததாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அனோ கூறினார்.

இதேவேளை, ஒரு வாரத்துக்கும் மேலாக மறாவியை, தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுததாரிகள் குழுவின் முன்னணி பிலிப்பைன்ஸ் ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாகவும், குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகளின் தலைவர் காயமடைந்துள்ளதாகவும், அனோ மேலும் கூறினார்.

இந்நிலையில், மறாவியில், மூன்று மலேஷியர்களும் ஒரு இந்தோனேஷியரும் அரபு ஆயுததாரிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என, அனோ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மறாவியை முழுமையாக எரிக்க ஆயுததாரிகள் குழு திட்டமிட்டுள்ளதாகவும், ரமழானின்போது, அருகிலுள்ள இலிகன் நகரத்தில், இயலுமானளவுக்கு பல கிறிஸ்தவர்களைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அனோ கூறினார்.

இந்நிலையில், தளபதி இஸ்னிலோன் ஹபிலொன், மறாவியிலேயே எங்கோ ஒழிந்துள்ளதாக, அனோ தெரிவித்தார்.

இதேவேளை, பிறிதொரு தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக, அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

அண்மைய ஆண்டுகளில், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியாவிலுள்ள சிறிய ஆயுதக்குழுக்கள், ஐ.எஸ்.ஐ.ஸ் ஆயுதக்குழுவின் கீழ் இணைந்து போராடி வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .