2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்செஸ்டர் தாக்குதல்: ‘குண்டுதாரியின் வலையமைப்பு இன்னும் வெளியில்’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்டரில்,  தற்கொலைத் தாக்குதலை நடாத்திய சல்மான் அபேடியின் வலையமைப்பின் உறுப்பினர்கள், இன்னும் வெளியில் இருக்கலாம் என, ஐக்கிய இராச்சியத்தின் உள்விவகாரச் செயலாளர் அம்பர் றூட், நேற்று  (28) தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (22) இடம்பெற்ற குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 16ஆவது நபரைக் கைது செய்துள்ளதாக, ஐக்கிய இராச்சியப் பொலிஸார், இன்று (29) தெரிவித்தனர். தாக்குதலுடன் தொடர்புடையவர்களென மொத்தமாக 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், எதுவிதக் குற்றச்சாட்டுமில்லாமல் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் விசாரணைக்காக, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, அபேடி ஆபத்தாக விளங்கக் கூடியவர் என்ற பொதுமக்களின் எச்சரிக்கைகளை, எவ்வாறு கையாண்டது என்பது குறித்து எம்.ஐ5,  விசாரணையொன்றை நடத்தவுள்ளது. அபேடியைப் பற்றி என்ன கருதுகோள்கள் எடுக்கப்பட்டன என்பது குறித்து எம்.ஐ5 விசாரிக்கவுள்ளதாக, எம்.ஐ5 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபேடியின் அடிப்படைவாதக் கருத்துகள் குறித்து, ஆகக் குறைந்தது மூன்று தடவைகளாவது எம்.ஐ5 எச்சரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதையடுத்தே, எம்.ஐ5 விசாரணை நடாத்தவுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .