2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்செஸ்டர் தாக்குதல்: சல்மான் அபேடி யார்?

Editorial   / 2017 மே 24 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்டர் அரங்கில், தற்கொலைத் தாக்குதலை, நேற்று முன்தினம் (22) நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவர், 22 வயதான சல்பான் றமடான் அபேடி என பொலிஸார் பெயரிட்டுள்ளனர்.   

லிபியாவின் முன்னாள் பிரதமர் கேணல் கடாபியின் அரசாங்கத்துக்கு எதிரானவர்களாக மாறியதைத் தொடர்ந்து, லிபியாவிலிருந்து வெளியேறிய லிபியப் பெற்றோர்களுக்கு, 1994ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு முன்பதாக, மன்செஸ்டரில், அபேடி பிறந்துள்ளார்.   

இலண்டனில் சில ஆண்டுகளைக் களித்த அபேடியின் குடும்பம், பின்னர், மன்செஸ்டர் நகரத்துக்கு நகர்ந்துள்ளது. மன்செஸ்டரில், டிட்ஸ்பெரியிலுள்ள பள்ளிவாசலொன்றில், அபேடியின் தந்தை, வழிபாடுகளை நடத்துபவராக இருந்துள்ளார்.   

மன்செஸ்டரில் பாடசாலைக்குச் சென்ற அபேடி, சல்போர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து விலகி, வெதுப்பகமொன்றில் பணிபுரிந்துள்ளார்.   

அபேடியின் தாயும் தந்தையும், லிபியாவுக்கு வாழத் திரும்பியுள்ளதாக நம்பப்படுகையில், குறிப்பிட்ட காலத்துக்கு, ஐக்கிய இராச்சியத்தை விட்டு வெளியேறிய அபேடி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐக்கிய இராச்சியத்துக்குத் திரும்பியுள்ளார் என்று நம்பப்படுகிறது.   

அபேடியின் குடும்பம், பொலிஸாரால் தேடுதல் நடத்தப்பட்ட, பலோபீல்டிலுள்ள எல்ஸ்மோர் வீதியிலுள்ள வதிவிடம் உட்பட, ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளில், மன்செஸ்டரில் வசித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாரிய லிபிய சமூகங்களிலொன்று,  மன்செஸ்டரிலேயே இருந்துள்ளது.   

இந்நிலையில், பொலிஸாரால் தேடுதல் நடத்தப்பட்ட இடத்தில், அண்மையை ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இருந்துள்ளனர். சிலர்,  சிரியாவில் தொடர்பைக் கொண்டிருந்த நிலையில், சிலர் லிபியாவில் தொடர்பைக் கொண்டுள்ளனர். இவர்களில், சிலர் உயிருடன் உள்ள நிலையில், சிலர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .