2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானின் காஷ்மீரில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், சீனா இராணுவத்தை குவித்து வருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையொன்றை நடத்தியுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீனாவுக்கான இந்தியத் தூதர் சி.ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் சீனா தனது 11,000 இராணுவ வீரர்களை குவித்துள்ளமை மற்றும் ஏவுகணை நிலை நிறுத்தியிருப்பது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், சீனாவின் ஆயுத குவிப்பு தொடர்பாக எல்லையில் ஆய்வு மேற்கொள்ளவும்  இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும்படி, சீன அரசுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன், மேலும் இந்திய உயர் இராணுவ அதிகாரிக்கு விசா வழங்க மறுத்த விவகாரம் மற்றும் அண்மைக்காலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா அதிக அக்கறை காட்டுவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்படது.

இதேவேளை,  பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், சீனா இராணுவத்தை குவித்து வருவதாக தெரிவிக்கப்படுவதை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 02 September 2010 09:24 PM

    போர்மேகம்? பாகிஸ்தானில் அமெ. ஐரோப்பிய நடவடிக்கைகள் தோற்றுப்போகுமாறு பார்த்துக்கொண்டு பின்னர் தீவிரவாதிகளினூடாக இந்தியாவில் ஊடுருவல் செய்ய சீனா விரும்பலாம், காஷ்மீர் இன்னமும் இந்தியாவின் பகுதி என்று சீனா அங்கீகரிக்கவில்லை. இதனால் இராஜதந்திர தடைகள் ஏற்பட்டு இராஜதந்திரிகள் திருப்பி அழைக்கப்பட்டிருக்கின்றனர், இருதரப்பிலும். அமெ. ஐரோப்பிய நாடுகள் மீது கோபத்திற்கு சீனா இந்தியாவை தாக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்தியாவோ மேற்கை வெகுவாக நம்பி இருக்கிறது, ஏமாறுமோ? ஊழலுக்கு பயந்து ஆயுதம் வாங்குவதில்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X