2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காலைஉணவு சர்ச்சையால் மனைவி உட்பட ஐவரைக் கொன்று தானும் தற்கொலை செய்த நபர்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altஅமெரிக்கர் ஒருவர் காலை உணவு குறித்த வாக்குவாதத்தால் ஆத்திரமுற்று தனது மனைவி மற்றும் மகள் உட்பட் 5 பேரை கொன்றதுடன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கெண்டக்கி மாநிலத்தின் பிறிதிட் கவுன்ரி பிரதேசத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்டான்லி நீஸ் (47) என்பவரே இவ்வாறு தனது மனைவி, வளர்ப்பு மகள் மற்றும் மேலும் மூவரை  சுட்டுக் கொன்றுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுக்காக முட்டைகளை எப்படி அவிப்பது என்பது தொடர்பாக நீஸுக்கும்  மனைவி சந்ராவுக்கும் (54)  ஏற்பட்ட வாக்குவாதத்தில், நீஸ் ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து வந்து இக்கொலைகளைப் புரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தரா, அவரின் 28 வயது மகளான ஸ்ரோங் (28) மற்றும் அயலவர்களான  டென்னிஸ் டர்னர் (31), தெரேஸா புகெட் (30), டொமி கில்பர்ன் (40) ஆகியோரே நீஸினால் கொல்லப்பட்டுள்ளனர்.

"தெரேஸா புகட் தனது 7 வயதான மகள் முன்னிலையில் சுடப்பட்டார். அவரின் மகள் 'தயவு செய்து என்னை சுட வேண்டாம்' எனக் கெஞ்சியபோது 'சரி,  நீ போகலாம்' என நீஸ் கூறினார். அதன்பின் அச்சிறுமி தப்பியோடினாள்" என புகெட்டின் சகோதரி ஷேரி ஆன் ரொபின்ஸன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது,  நீஸ் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் இத்துப்பாக்கி வெடியோசையை செவிமடுத்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X