2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜேர்மனிய ஆளுங்கட்சியை தோற்கடித்த ஜப்பானிய அணுஉலை கதிர்வீச்சு

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியின் மிகச் செல்வ செழிப்புமிக்க மாநிலமான பாடென் - வூர்டெம்பர்க் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல்  தலைமையிலான கூட்டணி தோல்வியுற்றுள்ளது.

அணுசக்திக்கு எதிரான பசுமைக் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன. இதனால் ஏஞ்சலா மார்கெல்லின் பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அம்மாநிலத்தில் கடந்த 58 வருடங்களில் முதல் தடவையாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை ஜேர்மனியின் 16 மாநிலங்களில் ஒன்றில் மாநில ஆளுநர் பதவியை வகிக்கும் வாய்ப்பை பசுமைக்கட்சி முதல் தடவையாக பெற்றுள்ளது.

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை கதிரியக்க கசிவு விவகாரம் இத்தேர்தலில் எதிரொலித்துள்ளதாக கருதப்படுகிறது.  கடந்த வாரம ஜேர்மனியில்  சுமார் இரண்டரை லட்சம் பேர் அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றி ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த வெற்றி என பசுமைக்கட்சியின் தலைவர் வின்பிரைட் கிடேஸ்ச்மன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய அணுசக்தி விவகாரம் காரணமாக தமது கட்சி வலிமிகுந்த தோல்வியைத் தழுவியுள்ளதாக சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கல் ஒப்புக்கொண்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .