2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் மிகப் பழைமையான இந்து ஆலயம் ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தின் அவ்பர்ன் நகரிலுள்ள ஸ்ரீ மந்திர் ஆலயத்தின் மீது மார்ச் 19 ஆம் திகதி இரவு முகமூடியணிந்த இரு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இச்சம்பவத்தினால் ஆலய குருக்களும் பக்தர்களும் பீதிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் காட்சி, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த ஆலயம் 3 தசாப்த கால பழைமையானதாகும்.

இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைதாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக புலனாய்வாளர்கள் இந்து சமூகத்தினருடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • kari Thursday, 31 March 2011 11:48 PM

    இந்தியாவில் மற்றவர்கள் கோவில் கட்ட முடியாது என்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இங்கே எதுவும் கட்ட முடுயும். இது அவர்களுடைய நாடு.உங்களுடைய ஊளைச் சத்தம் இங்கே கேட்க வேண்டாமே. அவர்கள் பணம் வேண்டும் அவர்கள் மொழி வேண்டும் அவர்கள் உடை வேண்டும். அனால் கலாச்சாரம் மட்டும் வேண்டாம்.இந்து மதம் சாதி வெறி வளர்க்கும் மதம். இது உலகில் எங்கேயும் வேண்டாம்.என்னுடைய ஆதரவு அவர்களுக்குத்தான்.பல மொழி பல மதம் எங்கேயும் வேண்டாம்.

    Reply : 0       0

    xlntgson Friday, 01 April 2011 09:23 PM

    மதச்சார்பின்மை என்னாவது? கோவிலை இடித்தாலும் ஒன்றுதான் பள்ளியை இடித்தாலும் ஒன்றுதான் சர்ச்சை இடித்தாலும் ஒன்றுதான் நோக்கம் பிரச்சினையை உண்டுபண்ணுவதாகும். அங்கே யானை வளர்க்கலாம். அவை வெறி கொண்டு தாக்காமல் இருக்கும். மனிதருக்கு அல்லவா இப்போது மதம் பிடிக்கிறது! நான் இஸ்லாமியன் மதச்சார்பின்மையையும் பின்பற்றுகின்றேன் நான் மத நம்பிக்கை இல்லாதவனும் அல்லன். இறைவன் இருக்கின்றானா என்று கேள்வி கேட்டதற்காக நான் சந்தேகிக்கின்றேன் என்பதல்ல, அடுத்தவரியிலே அதற்கு பதில் உண்டு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X