2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தோனேஷியாவில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்

Editorial   / 2017 மே 25 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள, சனநெருக்கடி மிகுந்த பஸ் நிலையமொன்றில் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், பொலிஸ் அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கம்புங் மெலயு முனையத்துக்கு வெளியேயுள்ள வீதியொன்றில், தற்கொலைக் குண்டுதாரிகள் இருவர், தங்களது குண்டுகளை, நேற்று (24) இரவு வெடிக்க வைத்திருந்த நிலையில், குண்டுதாரிகள் இறந்ததுடன், கொல்லப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் தவிர, ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் ஐந்து பொதுமக்களும் காயமடைந்தனர்.   

அணிவகுப்பொன்றுக்குப் பாதுகாப்பு அளித்திருந்த நிலையில், குண்டுத் தாக்குதலில் தாமே இலக்குவைக்கப்பட்டதாக, பொலிஸார் நம்புகின்றனர். தாக்குதல் இடம்பெற்ற பகுதியானது, உள்ளூர்வாசிகளாலேயே அடிக்கடி பயன்படுத்தப்படுவதுடன், வெளிநாட்டவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை.   

மேற்கத்தேயர்களின் மீதான தமது கவனத்தை பெரும்பாலும் திருப்பியுள்ள இந்தோனேஷிய ஆயுததாரிகளின் பிரதான இலக்காக, அண்மையை ஆண்டுகளில், பாதுகாப்புப் படைகளே காணப்படுகின்றன.   

இந்நிலையில், தாக்குதலுக்கு யார் காரணம் என்றவாறான கருத்துகளை அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கவில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X