2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இமயமலையில் 211 புதிய உயிரினங்கள்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய நேபாளம் முதல் மியான்மார், திபெத், பூட்டான், வட கிழக்கு இந்தியா எனப் பரந்திருக்கும் கிழக்கு இமயலையில், 2009 தொடக்கம் 2014 வரையிலான காலப்பகுதியில், 211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்) அறிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ளவற்றில், 133 தாவர வகைகளும், 39 முள்ளந்தண்டிலிகளும், 26 மீன்களும், 10 ஈரூடக வாழிகளும் ஓர் ஊர்வன, ஒரு பறவை, ஒரு முலையூட்டியும் உள்ளடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

உலகின் மிகவும் பல்வகைமை வாய்ந்த உயிரினங்களைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இது விளங்குவதாகத் தெரிவித்துள்ள அந்நிதியம், வருடத்துக்கு 34 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.

எனினும், பூட்டான், வட-கிழக்கு இந்தியா, நேபாளம், வடக்கு மினாய்மார், திபெத்தின் தெற்குப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படும் பல்வேறுபட்ட சூழ்நிலைகள் காரணமாக, அப்பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான உயிரினங்கள், அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X