2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் தகவல்கள் திருட்டு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹட்சன் ராக் இத் தகவலை வெளியிட்டுள்ளது.

 இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” நபர் ஒருவர் டுவிட்டர் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள்உட்பல பல தரப்பட்ட  தரவுகளை டார்க் வெப்பில் விற்பனை செய்வதாகவும், அதில்  கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் , டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்இத் தரவுகள் எடுக்கப்பட்டதாகவும், விற்பனையாளர், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும்,  இத் தரவுத்தளத்தில் 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .