2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திபெத்தின் சுற்றுச்சூழலை அழிக்கும் பீஜிங்கின் கொள்கை

Freelancer   / 2022 ஜூன் 22 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திபெத்தின் இயற்கை சார்ந்த அமைப்புகள், குடிமக்களைப் பற்றிய சிந்தனை துளியளவும் இன்றி, பீஜிங்கால் தற்போது தங்களின் சொந்த நலனுக்காக சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

'1951 முதல் திபெத்: பீஜிங்கில் இருந்து விடுதலை, அபிவிருத்தி மற்றும் செழுமை' என்ற தலைப்பிலான திபெத்தின் சமீபத்திய வெள்ளை அறிக்கை, திபெத்தின் சுற்றுச்சூழலின் அழிவின் அளவைப் பற்றி எந்த கவலையும் பீஜிங்குக்கு இல்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறது என, திபெத் பிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ ஆவணத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை அபிவிருத்தி, மேலும் அணைகள் கட்டுதல் மற்றும் பல உட்கட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்வதைப் பற்றி குறிப்பிடுகின்ற போதிவும் ஒரு பந்தியில் கூட திபெத்தின் சுற்றுச்சூழலைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இறுதியில்,  இவை அனைத்தும் ஆறுகள் வறண்டு போவது, பனிப்பாறை உருகுதல், நிரந்தர பனிக்கட்டிகள் உருகுதல், வெள்ளம், புல்வெளிகள் இழப்பு மற்றும் பலவற்றுக்கு வழிவகுக்கும் என்று திபெத் பிரஸ் தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கழுகுப் பார்வையின் கீழ் திபெத் இருப்பதால், இவை அனைத்தும் நிகழ்வதாக திபெத் பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா மிகப்பெரிய மாசுபடுத்தும் நாடு மட்டுமின்றி, அவர்களின் காபன் உமிழ்வு கடுமையாக அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற மிகப்பெரிய சுற்றுச்சூழல் உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், தற்போது திபெத்தை ஆளும் பீஜிங், குறித்த பகுதியை ஒரு பாதுகாப்பான புகலிடமாக பார்க்காமல் குப்பை கொட்டும் வலயமாகப் பார்க்கிறது என்றும் தனித்துவமான உயிரியலைப் பாதுகாக்க தேவையான ஆதாரங்களை திபெத்துக்கு வழங்கவில்லை என்றும் திபெத் பிரஸ் தெரிவித்துள்ளது.
 
பீஜிங்கின் கொள்கைகளால் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அழிவு காரணமாக காலநிலை மாற்றத்தின் கடுமையான யதார்த்தத்தை திபெத் அனுபவிக்கிறது.

பெரிய லித்தியம் மற்றும் அணு (யுரேனியம்) சுரங்கங்கள் வளிமண்டலத்தில் ஹைட்ரோகார்பன்களை வெளியேற்றுவதன் மூலம் ஒரு பெரிய கார்பன் தடத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், அது ஒரே நேரத்தில் பருவமழை சுழற்சியை பாதிக்கிறது. 

உலகின் மிகப்பெரிய அணையான ‘தி த்ரீ கோர்ஜஸ் அணை’ மூலம் அவர்கள் கட்டும் அணைகள் உலகத்தால் கவனிக்கப்பட்டது.

பீஜிங்குக்கு ஆதரவாகத் தோன்றும் பல அணைக்கட்டுத் திட்டங்கள் சுற்றுச்சூழலில் பல அடுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதால் சர்வதேச விசாரணைக்கு கொண்டு வரப்பட்டன.

திபெத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ள பீஜிங்கின் கார்பன் நடுநிலை வலயம் 2060க்குள் (பரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர்) உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட இலக்கை நிறைவேற்ற திபெத்தை அவர்கள் அதை சரியான காபன் கொட்டும் வலயமாக பார்க்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .