2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

படைவீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவில், பிரெஞ் படைவீரர்கள் மூவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு, வட ஆபிரிக்க நாடான லிபியாவில் பிரான்ஸின் சிறப்புப் படைகளின் அங்கத்தவர்கள், நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உளவுத் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையின்போது ஹெலிகொப்டர் விபத்து ஒன்றில், படைவீரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி ஃபொஸ்வா ஹொலாந்தே புதன்கிழமை (20) தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில், ஆபத்தான புலனாய்வு நடவடிக்கைகளை தாங்கள் லிபியாவில் மேற்கொண்டுள்ளதாக உரையொன்றில் ஹொலாந்தே கூறியுள்ளார்.

இதேவேளை, லிபியாவில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருக்கும்போது, பிரெஞ் அதிகாரிகள் மூவரை இழந்தமை குறித்து அறிக்கையொன்றில் வருத்தம் தெரிவித்த பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜோ-ஈவ் லு தலியோன், எங்கு அல்லது எவ்வாறு துருப்புகள் கொல்லப்பட்டன என்ற மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

லிபியாவில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக மும்மர் கடாபி பதவியிலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டது முதல் 2011ஆம் ஆண்டிலிருந்து கொதிகளமாக இருக்கும் அங்கு, பிரெஞ் சிறப்புப் படைகளின் அங்கத்தவர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டதாக முதன்முறையாக, அரசாங்கப் பேச்சாளர் ஸ்டெபனே லு பல்லே புதன்கிழமை (20) தெரிவித்திருந்தார்.

சிறப்புப் படைகள் லிபியாவில் இருப்பதாகவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பிரான்ஸின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தும் முகமாகவும் உதவும் பொருட்டும் சிறப்புப் படைகள் அங்கிருப்பதாக லு பல் மேலும் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .