2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பூஸ்டர் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 14 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவிவருகின்றது.

இதனையடுத்து இத்தொற்றுப்  பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் 2 ஆம் தவணை தடுப்பூசிகளைச்  செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில்  பூஸ்டர் தடுப்பூசியும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” 4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும் மற்றும் மக்களை சோர்வடைய வைத்துவிடும். இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நாடுகள் இடைவெளிவிட்டு தடுப்பூசி செலுத்த வேண்டும். 

அத்துடன் குளிர்காலத்தில் தடுப்பூசி செலுத்துவது பலனை தரும். பேக்ஸ்லோவிட் மற்றும் ரெமிடெஸ்விர் ஆகிய மருந்துகள் ஒமைக்ரோனுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X