2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரித்தானியா நாடாளுமன்ற சபாநாயகராக லின்ட்சே ஹொய்லே தேர்வு

Editorial   / 2019 நவம்பர் 05 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக, தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லின்ட்சே ஹொய்லேயயை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று  தெரிவுசெய்துள்ளனர்.

அந்தவகையில், முன்னர் அதிகம் அறியப்படாதிருந்து பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான பிரச்சினைகளால் அதிகம் அறியப்பட்டவராக மாறிய ஜோன் பெர்கெளவை லின்ட்சே ஹொய்லே பிரதியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 22 ஆண்டுகளாக இருந்து வரும் லின்ட்சே ஹொய்லே, 2010ஆம் ஆண்டு தொடக்கம் ஜோன் பெர்கெளவின் பிரதி சபாநாயகராகவும் இருந்து வந்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏனைய ஆறு வேட்பாளர்களுடனான வாக்கெடுப்பில்ல் வென்று, 540 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், நான்காவதும் இறுதியுமான சுற்று வாக்கெடுப்பில் 325 பேரின் ஆதரவைப் பெற்று லின்ட்சே ஹொய்லே சபாநாயகராகியிருந்தார்.

முதல் மூன்று சுற்று வாக்களிப்புகளில் ஹரீட் ஹர்மனை லின்ட்சே ஹொய்லே தோற்கடித்திருந்தபோதும் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியிருந்தார். இந்நிலையிலேயே, சக தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிரயன்டுக்கு எதிராக இறுதுச் சுற்றில் 60 சதவீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தொடர்ச்சியான முடிவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை ஜோன் பெர்கெள தடுக்க முயன்றதாக ஆளும் பழமைவாதக் கட்சியினர் கருதியிருந்த நிலையில், அவர்களை அவர் ஆத்திரப்படுத்தியிருந்த நிலையில், தனது பதவியிலிருந்து கடந்த வியாழக்கிழமை விலகியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .