2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மகாவா மறைந்தது; சோகத்தில் கம்போடியா

Ilango Bharathy   / 2022 ஜனவரி 13 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘மகாவா “ என அழைக்கப்படும் எலியானது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாவா தனது 8 ஆவது வயதில்   நேற்றைய தினம்  உயிர் துறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபார மோப்ப சக்தி கொண்ட இவ் எலியானது இதுவரை சுமார் 100 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக பிரித்தானியாவின் விலங்குகள் நல அமைப்பு, மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எலிகளுக்கு கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் பயிற்சியை அளித்துவரும் அபோபா என்ற தொண்டு நிறுவனம் மகாவா மறைவு குறித்து, வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அபோபாவில் அனைவருமே மகாவா இழப்பால் வாடுகிறோம்.

 அதன் சேவைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். மகாவா வியத்தகு பணியை செய்து சென்றுள்ளது. மகாவாவின் வியக்கவைக்கும் மோப்ப சக்தி கம்போடிய மக்கள் நிம்மதியாக, கை, கால் இழக்கும் அச்சமின்றி வேலை செய்ய, விளையாட வழிவகை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .