2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

15 ஆண்டுகளில் 31 பெண்கள் பாலியல் வன்கொடுமை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில், கடந்த  15 ஆண்டுகளில் 31 பெண்களைப்  பாலியல் வன்கொடுமை செய்த கீத் சிம்ஸ் என்ற  குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் .என்.ஏ சோதனை மூலம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001ஆம் ஆண்டு, 12 பாதிக்கப்பட்ட நபர்களின் டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒரே மாதிரியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஏனைய19 சம்பவங்களையும் பொலிஸார் இதனுடன் இணைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலனாய்வாளர்கள், பொலிஸ் தரவுத்தளத்தில் இது தொடர்பான டி.என்.ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்தனர். இது சந்தேகத்துக்குரிய எண்ணிக்கையை 324 பேராகக் குறைத்தது.

இதனையடுத்து ஒருவழியாகக் கடந்த செப்டம்பரில், சிம்ஸிடமிருந்து ஏற்கெனவே இருந்து எடுக்கப்பட்டிருந்த டி.என்.ஏ மாதிரி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் சரியான பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீத் சிம்ஸ் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்  கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமே உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .