2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாகாண மாற்று திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

வி. தபேந்திரன்   / 2017 ஜூன் 13 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பான உயிரிழை ஆகியவை இணைந்து. மாகாண மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டியை, கிளிநொச்சி மத்திய கல்லூரியில், அடுத்த மாதம் 29, 30ஆம் திகதிகளில் நடத்த உள்ளன. 

இப்போட்டிகளில் பங்குபற்ற பின்வரும் விளையாட்டுகளுக்கு, பிரதேச செயலக ரீதியாக, மாற்றுத் திறனாளிகளான வீரர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். 

100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, 400 மீற்றர் ஓட்டப் போட்டி, 800 மீற்றர் ஓட்டப் போட்டி, 1500 மீற்றர் ஓட்டப் போட்டி, 4x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி, நீளம் பாய்தல், தட்டெறிதல், ஈட்டி எறிதல், குண்டு போடுதல், கண் பார்வையற்ற ஆண்களுக்கான சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி, முற்றிலும் வாய் பேசாத காதுகேளாதோருக்கான கால்பந்தாட்டப் போட்டிகள், பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி, இருக்கையில் அமர்ந்தவாறான பந்தடித்தல் போட்டி ஆகிய போட்டிகளே நடத்தப்பட உள்ளன.  

இப்போட்டிகள், 14 வயது முதல் 18 வயது வரையிலானோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.  

மாற்றுத் திறனாளிகளில் பின்வரும் வகையிலானோர் போட்டிகளில் பங்குபற்ற முடியும்:   
முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்டோர், முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்டோர், கை வலது குறைவு, பார்வைக் குறைவு, முற்றாகப் பார்வை அற்றவர், சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், மனவளர்ச்சி குறைந்தவர், கேட்டல் பேச்சு குறைபாடு உடையவர்கள்.  
பிரதேச செயலக ரீதியாக இப்போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட மட்டப் போட்டிகள், இம்மாத இறுதிக்குள் நடத்தப்பட உள்ளன.  

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளில், இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள், பிரதேச செயலகங்களில் உள்ள சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்டு, உடனடியாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  
போட்டிகளுக்கான வீரர்களை, பிரதேச மட்டத்தில் தெரிவு செய்வது உடனடியாக நிறைவு செய்யப்பட்டு, மாவட்ட மட்டப் போட்டிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளன.  
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் 021 228 3363 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில், தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்படவுள்ளது.   

மேற்படி நடைமுறை, வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் பின்பற்றப்பட உள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .