2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் இல்லை;மு.கா ஆதரவாளர் அதிருப்தி

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல்களில் ஒன்றை அட்டாளைச்சேனைக்கு வழங்காமல் விடுவது என்பது அநீதியான செயல் என முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் தமக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற வேண்டும் என்று நீண்டகாலமாக பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வந்திருந்தனர். இந்த நிலையில், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இப்பிரதேசத்தைச் சேர்ந்த மசூர் சின்னலெப்பையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தேசியப் பட்டியலில் பிரதிநிதித்துவம் இவருக்கு வழங்கப்படாமல் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0

  • Farhan Monday, 26 April 2010 07:08 PM

    தேசத்துக்கு பிரதிநிதி என்ற என்னத்தை கைவிட்டு , தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ன ஷேய்யப்போஹிரர் என்பதைக் கேள் .இதுவே வெற்றிக்கு வாய்ப்பஹும் . கருத்து வேறுபாட்டை மறந்து ஒன்று பட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் .

    Reply : 0       0

    munas Tuesday, 27 April 2010 08:21 PM

    இனிமேல் அட்டாளைச்சேனை பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் வாக்கு கேட்டு வருவது அவர்களுக்கு அழகல்ல

    Reply : 0       0

    rifai Tuesday, 27 April 2010 08:38 PM

    கட்டாயம் அட்டளைசெனைக்கு வழங்கவும் . நங்கள் பொத்துவில் மக்கள்.

    Reply : 0       0

    Munas-Doha Wednesday, 28 April 2010 12:50 AM

    முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி விட்டது. இனியும் தாமதியாது உள்ளூர் அரசியல் பிரமுகரான உதுமாலெப்பை அவர்களையும் அமைச்சர் அதாவுல்லா அவர்களையும் ஆதரிப்போமாக. வாழ்க தலைவர் அதாவுல்லாஹ் !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .