2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவசரகால சட்டத்தை தளர்த்துமாறு கனடா வாழ் தமிழர் கோரிக்கை

Super User   / 2010 மார்ச் 12 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதை தளர்த்துமாறு இலங்கையிடம், கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் சமூகத்தின் மீள்கட்டுமாணத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் தடைகளை இலகுபடுத்துமாறும் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் மேலும் கோரியுள்ளனர்.

இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரவை சந்தித்துக் கலந்துரைரையாடிய கனடா நாடாளுமன்ற வெளிவிவகாரச் செயலாளர் தீபக் ஒவ்ராய், புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு கோரியதாகக் குறிப்பிட்டார்.

30 வருடகால யுத்தத்தின் பின்னர், இலங்கையின் இறுதிச் சமாதானத்திற்கு இணக்கப்பாடு ஒரு தீர்க்கமானதாகும் எனவும் கனடா நாடாளுமன்ற வெளிவிவகாரச் செயலாளர்  தெரிவித்தார்.  தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக,  என்ன நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கிறது என்பதை கனடா அரசாங்கம் பொறுமையுடன்  அவதானிக்கும் எனவும் அவர் கூறினார்.

சுமார் 160,000 இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச்சென்றுள்ளமையை வரவேற்பதாகவும் கனடா வெளிவிவகார நாடாளுமன்றச் செயலாளர் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X