2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரு மாதங்களில் மயிலிட்டி விடுவிப்பு?

Editorial   / 2017 மே 31 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. இதில், இணைத் தலைவர்களில் மற்றொருவராக அங்கஐன் இராமநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, யாழ். மாவட்டத்தில், படைத்தரப்பின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற நிலங்கள் குறித்து பேசப்பட்ட போதே, மாவை எம்.பி, மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

“யாழ். மாவட்டத்தில் படையினர் வசம் இருக்கின்ற காணிகள் குறித்தும் அதனை விடுவிக்க வேண்டியது குறித்தும் நாங்கள் அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். இவ்வாறாக, பிரதமருடன் பேசியபோது, பல விடயங்கள் தொடர்பில் எமக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இதற்கமைய, எதிர்வரும் 2 மாத காலத்துக்குள், வலி. வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கை உள்ளது” என, மாவை எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X