2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இலங்கைக்கு பலமான பொருளாதாரம் உண்டு’

Editorial   / 2017 மே 31 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவுகளைக் கொண்ட 27 நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில், பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய, இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக, இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்காலத்தில், தீவு நாடுகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான நாடு,  இலங்கை என்று, அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது.

நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை உலகுக்கு காட்டும், இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு - 2017, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், நேற்று (30) பிற்பகல், கொழும்பு சினமன் கிரான்ட் ஹொட்டலில் ஆரம்பமானது. இதன்போது, அதற்குரிய சான்றிதழ், பிரித்தானியாவின் FDI சஞ்சிகையின் துணை ஆசிரியர் Jacopo Dettoni இனால், ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தச் சான்றிதழ், ஜனாதிபதியினால், நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால், வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு, 23 நாடுகளைச் சேர்ந்த 130க்கும் அதிகமானோரின் பங்குபற்றுதலுடன், இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

ஏற்றுமதி, உற்பத்தி, விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, ஏற்றுமதி சேவைகள், உள்நாட்டு அறிவுசார் சேவைகள், மின்சாரம் மற்றும் சக்திவலு, சுற்றுலாத்துறை போன்ற விடயங்கள் தொடர்பில், இங்கு முதன்மை கவனம் செலுத்தப்படுவதுடன், முன்னணி இலங்கை கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச அலுவலர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு, இந்த மாநாட்டின் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X