2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

உலகத்தமிழ் பேரவை சர்ச்சை : பிரிட்டிஷ் பிரதிநிதி இலங்கை வந்து சேர்ந்தார்

Super User   / 2010 மார்ச் 09 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


இலங்கை அரசாங்கத்துடன்  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக பிரிட்டிஷ் வெளிவவகார அமைச்சின் நிரந்தர பிரதிச்செயலாளர் ஸர்.பீட்டர் ரிக்கட்ஸ் சற்று முன் இலங்கை வந்து சேர்ந்தார்.

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகரிகள் அவரது வருகையை தமிழ்மிரர் இணையதளத்திடம் உறுதிப்படுத்தினர். 

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் பிரதிநிதி நாளைவெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடன் பேஎச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இவர்களது பேச்சுவார்த்தை குறித்து தமிழ்மிரர் இணையதளம் சற்று முன் வெளிநாட்டமைச்சின் உயர் அதிகாரியொருவருடன் தொடர்பு கொன்டு விசாரித்தது.எனினும்,அவ்வதிகாரி கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

அண்மையில் லண்டனில் இடம்பெற்ற உலகத்தமிழ் பேரவை மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் கலந்துகொண்டிருந்தார்.இந்நிகழ்வு  இருதரப்பு அரசாங்கங்களுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இப்பேச்சுவார்த்தையில் மிலிபன்ட் விவகாரம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .