2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஏமாற்றிய ஜோடி கைது

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய நாடுகளுக்கு நபர்களை அனுப்பிவைப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் பேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்து, அந்த விளம்பரத்தில் உள்ள இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நபர்களை ஏமாற்றிய, இருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு போகவேண்டுமாயின், தங்களுடைய வங்கிக் கணக்குகளின் மீதியை தூதுவராலயங்களுக்கு காண்பிக்கவேண்டும்.

ஆகையால், அந்த தொகையை வங்கி கணக்குகளில் வைப்பிலிடுமாறே ஏமாற்றி வந்துள்ளனர்.  
அதற்காக, போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் போலியான அடையாள அட்டை உள்ளிட்டவற்றையே இவ்விருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர்.  

வெல்லம்பிட்டிய, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரும், கந்தானையைச் சேர்ந்த 27 வயதான பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் இணைந்து இதுவரையிலும் 24 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து அறியமுடிந்துள்ளது என்று பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X