2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.தே.கவுடன் பிளவு : ஆளும் தரப்பு பேச்சுக்கு அழைப்பு ; மனோ கணேசன் அரசுடன் இணைவாரா ?

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணையும் சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையே இதற்குக்காரணம் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியுடன் மனோ கணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி இணைந்துகொண்டது.

ஜனாதிபதித்தேர்தேர்தலில் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும்,அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டுச்சேர்ந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணியொன்றை உருவாக்கியது.

இருந்தபோதிலும், ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு மனோ கணேசனின் கட்சி தொடர்ந்தும் ஆதரவளித்து வந்தது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவார் எனக்கருதப்பட்ட மனோ கனேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதர்கு தீர்மானித்திருந்தார்.கொழும்பில் இலகுவாக வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள்  அதிகம் இருந்தும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட அவர் எடுத்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

கன்டி மாவட்டத்தில் இதுவரை தமிழ் பிரதிநிதி ஒருவர் இல்லாத சூழ்நிலையிலேயே தாம் கலமிறங்கியுள்ளதாக மனோ கணேசன் அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்திருந்தார்.
கண்டி மாவட்டத்தில் மனோ கணேசன் அரசியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போன நிலையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மனோ கணேசனுக்கு  வழஙப்படாமஒயே ஐக்கிய தேசியக்கட்சியுடனான முறுகலுக்கு காரணம் எனக்கூறப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • The Analyst Thursday, 22 April 2010 01:34 PM

    மனோ தேர்தலில் தோற்றாலும் கொள்கையில் உறுதியாக இர்றுப்பர் என நம்புவோம்.

    Reply : 0       0

    kavi Thursday, 22 April 2010 06:20 PM

    மகிந்த, ரணிலை சந்தித்த பொது பேசப்பட்ட விடயம் தான் இந்த மனோ - புலி எதிருப்பு நிலை பாடு.

    TNA, cleared all tiger support MPs. Only person remaining was Mano. It was a request from India sent through Mahinda, when Mahinda met Ranil last week.

    India's short sight politics will have consequences...

    Reply : 0       0

    xlntgson Thursday, 22 April 2010 10:12 PM

    அரசுடன் இணைவார் என்ற யூகமே பெரும் ஆச்சர்யமானது ஆனால் எல்லானந்த தேரரரின் பேச்சை பார்த்தால் ஹக்கீமையும் சம்பந்தனையும் இணைத்து பேசியிருப்பதில் இருந்து எல்லா தமிழ் பேசுகின்றவர்களையும் இவர்கள் ஒன்றாகத்தான் கருதுகின்றனர் பிரிவினை கோருகின்றவர்களாக! மாநில சுயாட்சிக்கும் அதிகார பராவலாக்களுக்கும் வித்யாசம் தெரியாமலே இருக்கிறவர்கள் என்றே தெரிகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .