2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டிக்கு ஆதரவு- சம்பந்தன்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறையை தாம் விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அபிவிருத்தி அவசியமாகும் எனவும், அது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அபிவிருத்தியாக இருக்க வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

வவுனியா நகரசபை உப தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X