2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘சிறைகளில் வாடுகின்ற மலையக இளைஞர்களையும் விடுவிக்கவும்’

Editorial   / 2017 ஜூன் 15 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மலையக இளைஞர்களையும் விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.  

இந்த விவகாரத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சினை காரணமாக, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

நாட்டில் தற்போது நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பல சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெத்து வருகின்றனர். அதனடிப்படையில், கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய எல்.ரீ.ரீ.ஈ பிரச்சினையின் காரணமாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அதிகமானோரை விடுதலை செய்துள்ளனர்.  

நல்லாட்சி அரசாங்கம், மலையக இளைஞர்களின் மறுவாழ்வு தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு என்பது ஒட்டு மொத்த மலையக மக்களின் மனதிலும் ஒரு பெரும் அவாவாகக் காணப்படுகின்றது.  

இவ்வாறு சிறையில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் பல வருடகாலமாக தமது பெற்றோர், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து அவர்களை காணமுடியாது, குடும்பத்தில் எவ்வித சந்தோசம் மற்றும் துக்கங்களில் கூட பங்குக்கொள்ள முடியாது பல இன்னல்களுக்கு தினமும் முகம் கொடுத்து வருகின்றனர்.  கடந்த காலங்களில் கொழும்பு மாநகரத்தில் இரவு 6.00 மணிக்கு மேல் இராணுவத்தினர், சோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்தும் மக்களுக்கு பல்வேறுப்பட்ட அசௌகரிய சூழ்நிலையினை ஏற்படுத்தி வந்தனர்.

ஒரே இரவில், மலையக இளைஞர்கள்  300 பேரை  கைதுச்செய்து, பூசா முகாமில் அடைத்து வைத்தனர்.  

அவ்வேளையில் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு அவர் அமைச்சரவை அமைச்சராக இருந்தபோதிலும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்  நீதிமன்றத்தில் வழங்குத் தாக்கல் செய்தார்.

இலங்​கை நீதித்துறை வரலாற்றில், முதல் தடவையாக இரவு 12.00 மணிவரை நீதி மன்றத்தைச் செயற்பட வைத்து,  கைதுச்செய்யப்பட்ட 300 இளைஞர்களையும் ஒரே இரவில் விடுவித்தது மட்டுமின்றி, இரவு 6.00 மணிக்கு மேல் சோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற தடை உத்தரவினையும் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும், மலையக மக்களின் நலனின் இ.தொ.கா தொடர்ந்தும் கூடுதலான அக்கறை மற்றும் கவனம் செலுத்தி வரும் என குறிப்பிட்டுள்ளார். 

2012 மற்றும் 2013 ஆண்டுகளில் எனது பொறுப்பில் சமூக சேவைகள் அமைச்சு செயற்பட்ட போது, ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகலை சிறைச்சாலைகளில் கைதிகளாக சிறையில் அடைக்கப்படடிருப்பவர்களின் குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமைக்கு தள்ளப்பட்டனர்.  

தவறு செய்தவர்கள் அவர்களாக இருந்தாலும் தவறு செய்யாத அவர்களது குடும்பத்தினர்களும் பொருளாதார ரீதியில் அவர்களுடன் சேர்ந்து தண்டணை அனுபவித்து வருகின்றமையை கருதி அவர்களின் குடும்பங்களின் பொருளாதார சுமையினை குறைத்து அவர்களுக்கு உதவும் பொருட்டு சிறைச்சாலைகளில் கைதிகளாக இருப்பவர்களில் 300 குடும்பங்களுக்கு சுயத்தொழிலினை அமைத்துக்கொள்ளும் பொருட்டு, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள், நன்னீர் மீன்பிடி வளர்ப்பு வேலைத்திட்டம், தச்சு தொழில் பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மின் இயந்திர பழுதுப்பார்த்தல் பயிற்சிகள் போன்ற பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களின் பொருளாதார சுமையை குறைத்துள்ளோம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .