2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் ; இரா.சம்பந்தனுக்கு முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் அதிகப்பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப்பெற்று முதலிடம் வகிக்கின்றார்.

இரா.சம்பந்தனுக்கு கிடைத்திருக்கும் மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 24,488 ஆகும்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சின்ன தௌபீக் 23,588 வாக்குகளைப்பெற்று இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான சுசந்த புஞ்சி நிலமே 22,820 விருப்பு வாக்குகளையும் , எம்.கே.டி.எஸ்.குணவர்தன 19,734 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .