2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் வெற்றியின் பின் அரசுடன் இணைவு ; ஐ.தே.க மாத்தறை மாவட்ட வேட்பாளர் புத்திக பத்திரண மறுப்பு

Super User   / 2010 மார்ச் 22 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அரசாங்கக த்துடன் இணைந்துகொள்ளப்போவதாகக்கூறப்படும் செய்தியை புத்திக பத்திரண நிராகரித்துள்ளார்.

சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு பதிலளித்த புத்திக பத்திரண இது அரசாங்கத்தின் தரப்பில் தன்னுடைய வெற்றியை பொறுக்கமுடியாமல் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.

மாத்தறை  மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் புத்திக பத்திரண ஒரு ஊடகவியலாளருமாவார்.

இத்தாலி நாட்டுக்கான இலங்கையின் தூதுவராகக்கடமையாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகின்றார்.இவரது புதல்வியையே புத்திக திருமணம் செய்துள்ளார்.


இது குறித்து புத்திக பத்திரணவிடம் தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.

இதற்குப்பதிலளித்த புத்திக பத்திரண ஏன் பண்டாரநாயக்கா,சேனாநாயக்கா குடும்பத்தினர் வேறு வேறு கட்சிகளில் இருக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நான்கு வேட்பாளர்கள் பொதுத்தேர்தலின் பின் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக சிங்கள மொழி இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X