2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆஸி. குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும், ஆஸ்திரேலியாவுக்கு  அரசியல் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் புகலிடம் கோரிச் சென்ற 28 இலங்கையர்கள் நேற்று இடைமறிக்கப்பட்டிருந்த நிலையிலேயே ஆஸ்திரேலியா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தின் காரணமாகவே, அதிகமான இலங்கையர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு பிரவேசிப்பதாக ஆஸ்திரேலியாவின் பிரதி பிரதமர் ஜூலிய ஜில்லாட் கூறினார்.  

இந்த ஆண்டின் முதல் 66 நாள்களில் சட்டவிரோதமாக அரசியல் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு வந்த 20 இலங்கையர்களும், நேற்றுக் காலை படகு மூலம் வந்த 28 இலங்கையர்கள் உட்பட  இரண்டு கப்பல்ப் பணியாளர்களும் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புச் சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜூலிய ஜில்லாட்  தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் மீள்கட்டுமானம், இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தல்  ஆகியவற்றையே விரும்புவதாகவும் ஜூலிய ஜில்லாட் சுட்டிக்காட்டினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .