2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ?

Super User   / 2010 ஏப்ரல் 22 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE புதிய வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்படுவார் என வெளிநாட்டு ராஜதந்திரியொருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு இன்று மாலை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கருதப்படும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்ஹ,நிமல் சிரிபால டி சில்வா,பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் காணப்படுவதாக  செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை,வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவேயில்லை என பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ தமிழ்மிரர் இணையதளத்திடம் மறுப்புத்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹவிடம் கேள்வி எழுப்பியது.

தன்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ முற்றாக நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .