2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரபாகரனின் தாயார் வெளியேற்றம் ; இந்திய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Super User   / 2010 ஏப்ரல் 17 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேஷியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேஷியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விஸா பெற்று இந்தியாவுக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?

அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்று சொன்னால் விஸா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.

பிரபாகரன் தாயார் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை.

வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.

விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்றபோது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள்.

 முதலவருக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விஸா வழங்கிய பிறகு ஏன் அவர் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நெடுமாறன்.
(இந்திய இணையதளம்)


You May Also Like

  Comments - 0

  • Fayz - Qatar Sunday, 18 April 2010 04:19 AM

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவுக்கு இது மிகவும் வெட்கக்கேடு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X