2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

முதலாவது அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பதாக நாவலப்பிட்டி அறிக்கை முடிவு - கெஹெலிய ரம்புக்வெல்ல

Super User   / 2010 மே 03 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVEஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின்  முதலாவது அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பதாக நாவலப்பிட்டி தேர்தல் முறைகேடுகள் தொடர்பான அறிக்கையின் இறுதி  முடிவு எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு கண்டி மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி முதலாவது அமைச்சரவைக்கூட்டம் இடப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கு மீண்டும் குட்டித்தேர்தலொன்று நடத்தப்பட்டது.

இது குறித்தான பூரண விசாரணைகள் முடியும்வரை ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட  உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பொறுப்பு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

கடந்தவாரம் நாவலப்பிட்டி தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .