2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அரசுடன் இணைவாரா?

Super User   / 2010 ஏப்ரல் 06 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆளும் கட்சியில் இணைவாரா அல்லது அரசியலிலிருந்து ஒதுங்குவாரா என்ற கேள்வி கிழக்கு மாகாண மக்களுக்கு மத்தியில் எழுந்துள்ளதாக தமிழ்மிரர் இணையதளத்துக்கு  அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சின் சார்பில் போட்டியிடும்     முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசார நடவடிக்கைகள் எதிலும் இவர் பங்கு கொள்ளவில்லை என்றும் கிழக்கு மாகாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரசாரப்பணிகள் இடம்பெறும் காலகட்டத்தில் மாகாண சபை உறுப்[பினரான ஜவாத் புனித மக்கா நகருக்கு உம்ரா கடமையை நிறைவேற்றச்சென்றிருந்தார் என்றும் தற்போது நாடு திரும்பியிருக்கின்றார் என்றும் தெரியவருகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தனித்துப்போட்டியிட வேண்டும் என இவர் ரவூப் ஹகீமிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்தோடு மாகாண சபை உறுப்பினர் ஜவாதுக்கும்,கல்முனை மாநகர முதல்வரும்,வேட்பாளருமான ஹரீஸுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .