2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'மீனவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதில்லை'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

மீனவர்கள் எனும் போர்வையில் இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் கடத்தல்காரர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுக்கட்டும் என இராமேஸ்வர விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் எஸ்.எமிரேட் தெரிவித்து இருந்தார்.

வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்தியாவில் இருந்து வந்த இராமேஸ்வர விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதனை மீனவர்கள் செய்கின்றார்கள் என குற்றம் சாட்டப்படுகின்றது. மீனவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதில்லை.

கடத்தல்காரர்கள் தான் மீனவர்கள் எனும் போர்வையில் கடத்தலில் ஈடுபடுகின்றார்கள். அவர்களை, இலங்கை அரசாங்கம் கைதுசெய்து என்ன சட்ட நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுத்து என்ன தண்டனை வேண்டும் என்றாலும் வழங்கலாம்.

அதற்கு இந்திய மீனவர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X