2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பொலீஸ் உதவி பெற டக்ளஸ் கோரிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 22 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொலை,கொள்ளை,கடத்தல் சம்பவங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் கருத்து வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா உளவுப்பிரிவு என்று கூறிக்கொண்டு எவராவது முன்வரும் பட்சத்தில் உடனடியாக பொலீஸாருக்கு தெரியப்படுத்துவதன் அல்லது அயலில் உள்ளவர்களை உதவிக்கு அழைப்பதன் மூலம் மாற்று வழிகளைக்கையாள முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை,புதிய அமைச்சரவையில் கிடைக்கவுள்ள பொறுப்புக்கள் குறித்து தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

தற்போதைக்கு எதுவும் கூற முடியாது எனத்தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒன்றாக இருப்பது நல்லது என்றும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • Jananayagan Friday, 23 April 2010 08:21 AM

    அவசர அழைப்பு இலக்கம் ஒன்று உடன் தேவை. பல பிரச்சனைகளுக்கு தீர்வு இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .