2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

3 ராஜபக்ஷக்களும் பங்கேற்கவில்லை

Kanagaraj   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய மூவரும் பங்கேற்கவில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்,

முக்கிய பேச்சுவார்த்தை, கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், 25ஆம் திகதியன்று இடம்பெற்றது.

அன்றிரவு 7.30க்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை, இரவு 9 மணி வரையிலும் நீடித்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அண்மையகால நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுப்படுத்தாமல், ஒன்றாக பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள் செயற்படும் போது, தான் தலையிடமாட்டேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தங்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால், சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எம்.பிக்கள், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு, இரண்டு வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏனென்று ஜனாதிபதியிடம் வினவிய எம்.பிக்கள், அச்செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், நாடு முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற  பொருளாதார பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு எம்.பிக்கள் கொண்டுவந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .