2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாதப்பிரதிவாதங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்: பிரதமர்

Kanagaraj   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் கப்பல் விவகாரம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பல பிரிவினர்களுடன் வாதப்பிரதிவாதங்களைச் செய்துகொண்டிருக்கின்ற தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கே பிரதமர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை அலரி மாளிகைக்கு நேற்று திங்கட்கிழமை அழைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு அமைச்சர்கள் வழங்கியிருந்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கையையும் அமைச்சர்களுக்குக் கையளித்தார்.

அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களுக்குத் தெளிவுபடுத்திய பிரதமர், இந்த விவகாரம் தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் வாதவிவாதங்களுக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக இருந்த திலக் மாரப்பன, தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்தமையடுத்து அமைச்சர்கள் நடந்துகொண்ட விதம், அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .