2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை

Super User   / 2010 மே 04 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நண்பகல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி இன்று தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவிருப்பதாகவும், எனினும், இந்த சந்திப்புக்கான நேரம் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, தற்கால அரசியல் நிலவரம் மற்றும் அரசியலமைப்பு மாற்றத்தின்போது தமிழ், முஸ்லிம் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகவும் ஹஸன் அலி குறிப்பிட்டார். (R.A)



You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 04 May 2010 10:03 PM

    கொல்வின் ஆர் டி சில்வாவின் தேர்தல் சட்டம் ஐ தே க ஐந்தில் நான்கு பெரும்பான்மை பெறவும் ஜே ஆரின் சட்டம் இப்போது மூன்றில் இருபங்கு பெரும்பான்மை பெறவும் காரணமானது ஆகவே குழப்பமோ கலவரமோ அடையாமல் அரசுடன் நிதானமாக பேசுவதே இப்போதைய தேவை என்றாலும் தொகுதிகளையும் தேர்தல் சட்டங்களையும் ஒருதலைபட்சமாக (gerrymandering) ஜெரிமேண்டரிங் என்னும் அரசுக்கு தேவையானமுறையில் எல்லாம் சட்டம் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தால் ஒரு புண்ணியமும் இல்லை. ஏதாவது ஒரு முறையில் தெளிவாக இருக்க வேண்டும். எதை தமிழர் முஸ்லிம்கள் கேட்பார்களோ?

    Reply : 0       0

    sivaajilingkam Wednesday, 05 May 2010 12:04 AM

    முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளே!

    கண்ட கண்ட கட்சிகளுடன் கூடிக் குலாவாமல் மகிந்தாவை நேரடியாக ஆதரிப்பதே சிறந்த வழி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .