2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த பிள்ளயான் கோரிக்கை

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச்  சட்டத்தை   அமுல்படுத்துமாறு   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஒஸ்லோ பிரகடனத்தை நிராகரித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆசாத் மௌலானா டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

13வது திருத்தச்  சட்டம் அமுல்படுத்தல் மற்றும் ஒஸ்லோ பிரகடனத்தை நிராகரித்தல் ஆகியன தமது கட்சியின் கொள்கைகளாக  தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், 13வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும்  ஆசாத் மௌலான குறிப்பிட்டார்.

13வது திருத்தச் சட்டம் அமுலாக்குவதின் முக்கியத்துவம் குறித்து தாம் ஏற்கனவே இந்தியாவுக்கு தெரிவித்திருப்பதாகவும், இதற்கு இந்தியா இணங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், தமக்கு இந்திய ஆதரவு வழங்கும் எனவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ்வை சந்தித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனக் கொள்கைகள் தொடர்பில் நிருபமா ராவ்விடம் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .