2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை நிலைமை;அமெரிக்கா திருப்தி

Super User   / 2009 ஒக்டோபர் 05 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பெண்கள் எவரும் அண்மைக்காலத்தில்  கற்பழிக்கப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை  என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் சட்டவிரோதக்கொலைகள்,காணாமற்போதல்,தடுப்பு முகாமில் உள்ளோர் மீதான மீறல்கள் ஆகியன குறித்து தாம் கவனம் செலுத்துவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க ராஜங்க அமைச்சு, இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகமவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஏ எப் பீ செய்திச்சேவை தெரிவித்தது.
 
அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் கில்லரி கிளின்டன் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைத்த கருத்துக்களைக்கண்டித்து இலங்கை அரசாங்கம் தன்னுடைய ஆட்சேபனையை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் சமர்ப்பித்தது.

ஏனைய நாடுகளைப்போல் பொஸ்னியா,பர்மா,இலங்கை ஆகிய நாடுகளிலும் ஒரு யுத்த தந்திரமாக கற்பழிப்பு மேற்கொள்ளப்பட்டது என கிளின்டன் கூறியிருந்தார்.இதனைத்தொடர்ந்து,இலங்கை சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சீன,ரஷ்ய நாடுகள் விட்டோ விட்டோ அதிகாரத்தை பாவித்ததன் காரணமாக ஐநா பாதுகாப்புச்சபையில் யுத்தக்குற்றத்துக்கான விசாரணையிலிருந்து இலங்கை தப்பித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .