2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் வர்த்தகர் நாடுகடத்தல்

Super User   / 2009 டிசெம்பர் 25 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

48 வயதான பால்தேவ் நாயுடு என்ற வர்த்தகரே கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் விநியோகித்தமை மற்றும் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவியளித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள்  பால்தேவ் நாயுடுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பால்தேவ் நாயுடுவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X