2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வன்முறையற்ற தேர்தலுக்கு ஐ.நா - ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

Super User   / 2010 ஜனவரி 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துமாறு இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வெளியுறவுப்  பணிப்பாளர் கத்தரீன் அஷ்த்தன் ஆகியோர் தனித்தனியாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தேர்தலின் போதும், அதனைத் தொடர்ந்தும் அரசியல்க் கட்சிகள், ஆதரவாளர்கள் வன்முறைகளை தவிர்த்து தேர்தல் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் பான்கீமூன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

யுத்தத்தை தொடர்ந்து தேசிய ரீதியிலான முதலாவது தேர்தல் அமைதியாக நடத்தப்படுவது இலங்கையின் நீண்டகால சமாதானத்திற்கு அவசியமெனவும் பான்கீமூன் சுட்டிக்காட்டினார்.

பிரஸ்ஸில் வெளியிடப்பட்ட  ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அறிக்கையில் இலங்கையின் தேர்தல் தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுவருவதாக அதன் வெளியுறவுப்  பணிப்பாளர் கத்தரீன் அஷ்த்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X