2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஜெனரல் பொன்சேகா அன்னம் சின்னத்தில் போட்டி

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

நேற்று மாலை தமது இல்லத்தில் திடீர்  ஊடகவியலாளர் மாநாடொன்றை ஜெனரல் சரத் பொன்சேகா நடத்தினார்.

இங்கு டெயிலிமிரர் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த  ஜெனரல் பொன்சேகா,அன்னம் சின்னம் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. அச்சின்னத்தின் கீழ் தாம் போட்டியிடக்கருதியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 26 இல் இடம்பெற்ற ஆறாவது ஜனாதிபதிபதித்தேர்தலில்  முன்னாள் இராணுவத்தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனைதொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக  கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் தஙிகியிருந்த ஜெனரல் பொன்சேகா நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டார்.

27ஆம் திகதி இரவு பாதுகாப்புப்படையினர் அனைவரும் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் தமது வீடு வந்துசேர்ந்த ஜெனரல் பொன்சேகா,28ஆம் திகதி ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக தாம் இராணுவ உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து சதி முயற்சி மேற்கொண்டதாகக்கூறப்படும் குற்றச்சாட்டையும் இங்கு  பொன்சேகா நிராகரித்தார்.

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நான்கு பொலீஸார் மாத்திரம் ஓய்வு பெற்ற இராணுவத்தளபதியொருவருக்கு நியமிக்கப்பட்டதாகவும் நிராயுதாபாணிகளான    சிவிலியன்கலை தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக தாம் கடமையில் அமர்த்தியுள்ளதாகவும் ஜெனரல் பொன்சேகா கூறினார்.

தாம் நாட்டை விட்டும் வெளியேறப்போவதில்லையென்றும்,உயிர் அச்சுறுத்த்ல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக தாம் வெளியேறவுள்ளதாகவும்,தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு தாம் தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளதகவும் ஜெனரல் பொன்சேகா இப்பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

தேர்தல் முடிவுகளை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றும்,இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு தாம்  முறைப்பாடு செய்துள்ளதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.   
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .